திங்கள், 12 செப்டம்பர், 2011

முனைவர் சந்திரா- 12.09.2011

இன்றைய விருந்தினர் முனைவர் சந்திரா அவர்கள்..
தமிழ் ஆசிரியர் மதுரை காமராஜர் பல்கலைகழகம்
சிறப்பு: தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள்
நூல் திறனாய்வு
கவிதைகள் எழுதுவது , கவி அரங்கங்களில் பங்கு
சிறந்த ஆசிரியர்

1. சங்க இலக்கியங்களில் தன் முனைப்பு தேவை .
ஐந்து வகையான தேவைகள் பற்றி கூறினார், அவை: உடல் சார்ந்த, பாதுகாப்பு சார்ந்த, ... தன்முனைப்பு சார்ந்த
தன்முனைப்பு தேவைகள் மிக முதிர்ந்த நிலையை அடைபவர்களுக்கே தோன்றுகிறது.
ஐந்தினைகளுள் (குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை) பாலை தினையலேயே தன்முனைப்பு தேவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதியமான் அவ்வைக்கு நெல்லி கனி கொடுத்தது,
' வாகை தானே பாலை அதன் புறனே' என்ற தொல்காப்பிய பாடலில் அகமும் புறமும் ஒன்று தான் என்ற கருத்து

2. எழுத்தில் ஆர்வம் விரிவுரைஆளர் ஆன பிறகே

3. பாரதிதாசன் கவியரங்கம் :
காலை பரிதியும் மாலை மதியத்தையும் வருணித்த கவிஞன்
பாட்டாளியை கதாநயகனாக பாடிய கவிபெரும் கூட்டாளி அவன் ..
சமத்துவ சமுதாயத்துக்கு சாமரம் வீசியவன்
சுயமரியாதை கொள்கைக்கு சுடர் விளக்கேற்றியவன்...
அடிமைத்தனத்தை கவிதை ஆயுதத்தால் சாடியவன் ..
முதுமையின் அன்பு பற்றி பாடிய முத்தான கவிஞன் ..
மனிதருள் நீயும் ஓர் மனிதன் மண்ணன்று ..விழித்திடு என்று கட்டளை கவிதை பாடியவன்

4. கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் உரை எழுதி உள்ளார். பாடல்களின் எளிய விளக்கம் ...

5. ஆய்வுகள்:
1.ஐம்பெரும் காப்பியங்களில் தர்மம் :
சிலப்பதிகாரத்தில் கோவலனின் தர்மம்: கீரிப்பிள்ளை கதை ..;
மணிமேகலையில் சிறைச்சாலை அரசாலையாக மாறியது; சீவக சிந்தாமணியில் எட்டு அறிவுரைகள்; ...

2. பெரிய புராணத்தில் வாழ்க்கை நெறி:
கொள்கையில் பிடிப்பு-தில்லை நந்தனார் கதை ...

3. இயற்கையை ஆசிரியராக பாவித்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை:
மீனிடம் வலிவு சுளிவு , சிறுகொடியில் பெரிய பூசணி- பிரச்சனைகளை சமாளிப்பது ...

4. குடும்ப கட்டமைப்பில் நெறிமுறைகள்; கூட்டாக வாழ்வது பற்றி

5. தாயுமானவர் பற்றி:
பரிபூரனட்ந்தம் எனும் நூலில் பிரபஞ்சக்கோட்பாடு பற்றி- ஐம்பூதங்களும் மனிதனும் இணைந்து செயல் படுவது குறித்து - வெப்பமும் மனித வாழ்வும், கடல் அலை போல இறைவன் சிறு விளையடுகளால் சோதிப்பான் ....

6. திருமுலர் இன் திருமந்திரம் பற்றி :
பத்தாவது திருமுறை, ௨௨௫௬ வது பாடல்- மரத்தை மறைத்தது மாமத யானை/ மரத்தில் மறைந்தது மாமத யானை
ஐம்பூதகளில் இறைவனை காண்பதும் மறைவதையும் பாடிஉள்ளார்... காரிய காரண மயக்கம்.. இலக்கிய இலக்கண மயக்கம்... செயல் சிந்தனை மயக்கம் .... சமயங்கள் கோட்பாடுகள் மயக்கம் குறித்து

6.கருதருங்குகளின் பங்கு/ முக்கியத்த்உஅம் குறித்து

7. கவிதைகள்:
விளைநிலங்கள் வீடாக மாறுவது பற்றி-

சட்டத்தில் இடம் உண்டோ;
நிலங்கள் பச்சை பட்டாடை கலையப்பட்டு கந்தல்கோளத்தில் காட்சி
நாற்றுநட்ட பெண்களெலாம் தீப்பெட்டி தொழில்சாலை பேருந்தில் பயணம்
...
பூமகள் மேனி அளக்கப்பட சிலுவைகளாய் அறயப்பட்ட கல்லாணிகள்
புல்பூண்டுகள் இருந்த இடத்தில் இன்று கற்குவியல்கள்..
பசுந்தளிர்கள் வாழ்ந்த இடத்தில் பலமாடி கட்டிடங்கள்...
ஐந்தறிவு ஜீவன்களின் சொத்துக்களை அபகரிக்கும் ஆறறிவு மனிதன் மீது
வழக்கு தொடர .... எச்சடத்தில் இடமும்ண்டு எவரேனும் சொல்வீரோ ..

மண்
பாரத யுத்தமும் உண்ணால் தான்
பாரத் பெற்றோலஐமும் உண்ணால் தான்
கறுப்புத் தங்கம் முதல் சொக்கத் தங்கம் வரை
அனைத்தும் மண்ணே உண்னுள் தான் அடக்கம்
குடிசை முதல் கோபுரம் வரை நீ இல்லை என்றால் கட்டிடங்கள் ஏது
....
கரையில் நின்று நதி பெண்ணை காவல் காத்தாய்...
இன்றோ கொள்ளைர்களிடம் களவு போனாய்...

அக்க்ரினைகளை கருவாக வைத்து பல பாடல்கள் எழுதி உள்ளார். 'அக்க்ரினை ஆயுதம்' என்ற தலைப்பில் அவற்றை வெளியிட உள்ளார்.

மிதிவண்டி
ஏழைகளின் துக்க வாகணம்
சிறார்களின் சொர்க்க வாகணம்
எத்தனை முறை மித்தாலும் எதிர்த்து பேசாத மௌன வாகணம்
உண்ணாமலையே உழைக்கும் உண்ணத வாகனமும் நீ தான்
...
அன்றும் இன்றும்
.....மூலையை அடகு வைத்து முதுகுக்கு பின்னால் பேரம் பேசும் கல்வி இன்று ...

பாரதியார் கவியரங்கத்தில் :
பாரதியின் ஆதிச்சுடியின் நேற்றிச்சுடியாக அமைந்ததே
அச்சம் தவிர் என்பது தான்
சிறார் முதல் சீராளன் வரை அனைவரும் அறிந்த அருமை தொடர்-
அச்சம் இல்லை அச்சம்மில்லை
...
தனி ஒருவனாய் நின்று இலக்கிய பயணம் செய்தவன் ..
பயம் இல்லை எனில் ஜெயம் உண்டு என்று முழங்கியவர் இவர் ..
அஞ்சாமையே அவரது தாரக மந்திரம் ..
கை கட்டை நிற்பவரை கண்டால் கடுஞ்சினம் கொண்டு சீறியவர் இவரே
அஞ்சாமையை அஸ்திவாரமாக கொண்டு கவி மாளிகை கட்டியவர் இவர்
பேசா பொருளை பேச துணிந்தவர் கேட்கா வரத்தை கேட்க துணிந்தவர்
..கணபதி பாடலில் அச்சம் நீக்கு என்றார்
அசையஆ நெஞ்சம் வேண்டும் என்றார் அகவருட்பவில்
அஞ்சேன் என்றார் விருத்தப்பாவில்
அருள் உண்டு அச்சம் இல்லை என்று அடித்து கூறினார்
போருக்கு அஞ்சுவேனோ உன்னை போடி ஆகுவேன் என்று
மாயையிடம் சூளுரைத்தவர்
அச்சம் உள்ளவன் அரைமனிதன் என்றார் ...
அச்சமும் வேட்கையும் வென்றுவிட்டால் அங்கே மரணமும் வெல்லப்படும் என்றார்..
காற்று தேவனை கண்டு அஞ்சாதீர் அதுதான் பிராணன் என்றார்
காலனே உன்னை நான் சிறு புலேனே மதிக்கேறேன்
என் காலருகே வாட சற்றே உன்னை மிதிக்கேரேஎன் என்று
எமதர்மனையே எதிர்த்து பேசிய
கத்தாலன் இவர் .....

வளர்ந்து வரும் எழுத்தாளர்களை அவர் நூற்களை திறனாய்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்துகிறார்

தமிழியல் உணர்ச்சி குறித்து:
கரிகாலன் அவையில் கன்னித்தமிழாய்
பாண்டியன் அவை தனில் பைந்தமிழாய்
சேரன் செங்குட்டுஅன் அவையில் செந்தமிழாய்
மூவேந்தர் அவையில் முத்தமிழாய் ஆனாய்
ஆதிமந்தியாரின் அரசவையில் அழகு தமிழ்
ஔவையாரின் அருகில் அமிழ்த தமிழ்
வெள்ளிவீதியாரிடம் விளையாடிய வெந்தமிழ்
பாரி மகளிர் பாவிலோ பசுந்தமிழ்
ஆண்டாளின் அருளில் அற்புத தமிழ்
மூவா தமிழே நீ தானே அன்று மோசி கீரருக்கு முரசு கட்டிலை அளித்தாய்
பாரிக்கும் கபிலனுக்கும் பாலம் அமைத்தாய்
திருவள்ளுவரிடம் திளைத்தாய் திதித்தாய்
கம்பனின் கரங்களில் கற்பூர தமிழாய்
இளங்கோவடிகளின் இதழில் இன்ப தமிழாய்
நாயன்மார்களின் நாவில் நறுந்தமிழாய்
...
உ வே சா வின் உயிரில் உவர்ப்பு தமிழாய்
சித்தர்களின் சிந்தனையில் சித்திர தமிழாய்
வீரமா முனிவரின் வீர தமிழாய்
மஹா கவியின் மதுர தமிழாய் ...
பாரதிதாசனிடம் பண்பாடினாய் பாமர தமிழாய்
கண்ணதாசனிடம் கனிந்தாய் காவியத்தமிழாய்
இலக்கணமாய், இலக்கியம்மாய் , உரைநடையாய் உலா வந்த நீ
இன்று புதுக்கவிதையாய் புத்தாடை அணியும் நாள்
....
தமிழா!!! தமிழ் உன் முரசு ஆகட்டும்
தமிழ் பண்பாடு உன் கலசம் ஆகட்டும்

தற்போது நூல்களுக்கு அணிந்துரை எழுதுகிறார்
நூற்றுக்கும் மேலான திறனாய்வுகளை புத்தகமாக வெளியிட உள்ளார்

ஹைகூ :

அக்க்ரினை சார்ந்த ஹைக்கூகள் எழுதுகிறார்

பிறந்த அன்றே மரணத்தை சந்திக்கும் மாயப்பிறவி- செய்தித்தாள்

கண்ணாடி சட்டத்தில் இருந்து கொண்டு கடமையை உணர்த்தும் கண்ணியவாதி- கடிகாரம்

அருகருகே இருந்தாலும் முட்டி மோதாது..... சுழலும் சமாதன பிறவி - மின்விசிறி

உழவு மாடுகள் உல்லாசமாய் பயணம் போகின்றன
உயிர் இழக்கப்போவது தெரியாமல்
பயிர்களோடு மனிதப்பினிகளை சேர்த்தே வளர்க்கின்றன செயற்கை உரங்கள்
நிலமகளின் துகில் உரிக்க துர்ச்சாதனனாய் அறுவடை இயந்திரங்கள்

நதியே!
...
நன்செயும் புன்செய்யும் உன் இளைப்பாறும் இடங்களாய் இருக்க
நீயோ காற்றோடும் முகிலோடும் உறவாடி ஊருக்குள் வருகிறாய்
அழையா விருந்தாளியாக ...

காலணி
குடியானவர் முதல் கோடீஸ்வரர் வரை நீங்களே துணை
...
பொன் அணி இல்லையேல் மாற்றுக்கு புன்னகை உண்டு
நீங்கள் இல்லையேல் பயணம் வெறுமையே ....

இவர் மாணவர்களையும் கவிதை , திறனாய்வு எழுத ஊக்குவிக்கிறார் ... மாணவர்களின் தொகுப்பும் வெளிவந்துள்ளது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக