திங்கள், 12 செப்டம்பர், 2011

ஆசிரியர் நா.சு. சிதம்பரம் 13.09.2011

ஆசிரியர் நா.சு. சிதம்பரம்
அறிவியல் ஆசிரியர் , ஓய்வு.
சிறப்பு: அறிவியல் அறிவை பரப்புவதையே தன் கொள்கையாக கொண்டு வாழ்பவர்
அறிவுச்சுடர், அறிவியல் ஒளி என்ற இதழ்களை நிறுவி இந்த சேவையை செய்து வருகிறார்.

இவர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஆரம்ப காலத்தில் நம் நாட்டு கல்வி முறையில் மாற்றம் வேண்டி, மாணவர்களின் சிந்தனையை தூண்டும் விதத்தில் பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்க எண்ணினார். அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அப்போதைய நிர்வாக குழு தலைவர் டாக்டர் சுந்தரவதணன் அவர்களும், அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மணவாள ராமானுஜம் அவர்களும் பெரிதும் உதவிய பெயரில், அறிவுச்சுடர் எனும் மாதம் இருமுறை வெளிவந்த ஒரு பத்திரிக்கையை நிறுவினார்.

மாணவர்களை எழுத தூண்டினார், நிறைய அறிவியல் செய்திகளை வெளியிட்டார். இப்பத்திரிக்கையில், பாடத்திட்டத்தில் இல்லாத பொதுஆன செய்திகளை வெளியிட்டார். மாணவர்கள் எழுதியதில் பிழை இருந்தால் கூட அதை அப்படியே வெளியிட்டார்...இது மா.போ.சி அவர்களின் ஆலோசனையின் பெயரில், பிற்க்காலத்தில் அவர்கள் தங்கள் கட்டுரைகளை படித்து பார்க்கும் போது அவர்களது பிழைகளை அவர்களே உணர வேண்டும் என்பதற்காக என்று சொன்னார்.

ஆசிரியர் பணியில் நின்று ஓய்வு பெற்றப்பிறகும் அறிவியல் சிந்தனையை தொடர்ந்து பரப்பவேண்டும் என்ற ஆர்வம் தூண்டினாலும் பொருளாதார சிக்கல்கள் இடையஊராக இருக்க, தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் தலைவராக இருந்த திரு அய்யம்பெருமாள் அவர்களின் தூண்டுதலின் பெயரில் அறிவியல் ஒளி எனும் இதழை சிறய அளவில் முப்பது ரூபாய் சந்தாவிலே தொடங்கினார்.

அது இன்று நன்கு வளர்ந்து ஐந்தாவது ஆண்டை எட்டிவிட்டது. டாக்டர் வா.சே.குழைந்தைசாமி, திரு சிட்டிபாபு ஆகியோரின் ஆலோசனை மற்றும் ஆதரவு இதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

இந்த இதழில் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தமிழில் அறிவியல் செய்திகளை எழுதவும் அறிவியல் சிந்தனையை பரப்ப வேண்டி அறிவியல் வினா விடைகள், வானவியல் மற்றும் பிற அறிவியல் தகவல்கள் வெளியிடபடுகின்றன. இந்த இதழில் வெளிவந்த வானவியல் அறிஞர்கள் குறித்த முனைவர் அய்யம்பெருமாள் எழுதிய தகவல்கள் தொகுக்கப்பட்டு தமிழ் மணி பதிப்பகத்தால் வானவியல் முன்னோடிகள் என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.

பெங்களுருவை சேர்ந்த திரு மோகன சுந்தர ராஜன் அவர்கள் இந்திய விண்வெளி சாதனை என்று எழுதிய தொடரும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.

நோபெல் பரிசு பெற்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதிவரும் இவரது வெளியீடுகளும் தொகுக்கப்பட்டு வெளி வந்துள்ளன. இவை இது வரை பன்னிரண்டு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.

இந்த இதழ்களின் வாசகர் வட்டம் மிக சிறியதாக உள்ளதை சுட்டி காட்டினார். எனினும் தளராது பல பள்ளிகளுக்கும் இலவசமாக இந்த இதழ்களை அனுப்புகிறார்.

பள்ளிகளுக்கு நூற்கள் வாங்க நல்ல நிதி (மத்திய அரசாங்கம் ரூபாய் பத்தாயிரம் அளவில்) ஒதுக்கப்பட்டாலும் அவற்றை இன்னதான் செய்கிறார்களோ என்று ஆதங்கப்பட்டார். நூலகங்களும் இந்த இதழில் ஆர்வம் காட்டினாள் இதன் வாசகர் வட்டம் பெருக பெரிதும் உதவும் என்றார்.

அறிவியல் மனப்பான்மை
அறிவியல் மனப்பான்மை வளர்க்கவேண்டும் என்ற ஒரே இலட்சியத்தோடு இந்த இதழை நடத்துகிறார். கடவுளுக்கும், தலைவர்களுக்கும்,நடிகர் நடிகைகளுக்கும் விழா எடுக்கும் நாம் நமக்கு அன்றாடும் பயன்படும் மற்றும் இன்றியமையாததுமான அறிவியலை பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.அறவியலின் பயன்களை முழுமையாக அனுபவிக்கும் நாம் அவற்றை நமக்கு வழங்கிய அறிவியல் அறிஞர்களை பற்றி சிந்திப்பதேயில்லை.

எடுத்துக்காட்டாக இந்தியாவிலேயே அறிவியலுக்காக மூவர் நோபெல் பரிசு பெற்று உள்ளனர் அந்த மூவருமே தமிழர்கள். இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்போம்? தேசிய அறிவியல் நாள் என்று கொண்டடபடுகிறது என்ற எத்தனை பேர் அறிவோம்?

சர் சி வி ராமன் அவர்கள் ராமன் விளைவு என்ற
தன் கண்டுபிடிப்பை வெளியிட்டது பிப் 29 அன்று. அதை கொண்டாடும் வகையிலேயே பிப் 28 அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை நாம் இல்லாரும் அறிந்திருக்க வேண்டாமா.

இதை பரப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே இது வரை ௫௭ அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டுள்ளார் . இது அனைவரை சேர வேண்டும் என்ற எண்ணத்தில் புத்தகக்கண்காட்சியில் கூட கூவி கூவி விற்காத குறையாக இதை மக்களிடம் சேர்க்க முயல்கிறார்.

இயற்பியலில் ஆர்வம்:
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் அடிப்படை தன்மைகளை பற்றி கூறும் இயற்பியளிலேயே இவர் அதிக ஆர்வம் உள்ளவர். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் காலத்திலும் இயற்பியல் செய்முறை விளக்கங்களில் அதிகம் அவர்களை ஈடுபடுத்தயுள்ளார். அறிவியல் கல்வி ஒருவனை மூடனம்பிகையில் இருந்து விளக்கும்.

நோபெல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை பன்னிரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ள இவருக்கு இணையதளம் பெரிதும் உதவி உள்ளதை நன்றியோடு நினைவுகூர்ந்தார். இணையதளம் ஊர் இணை அற்ற நூலகம் அதை மாணவர்கள் சரியாக பயன்படுத்தவேண்டும் என்று வேண்டினார்.

நோபெல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர்களுள் இவரை பெரிதும் கவர்ந்தவர் மேடம் குறி அவர்கள். அவர் தன் கண்டுபிடுபுகளுக்கு காப்புரிமையை நிராகரித்தால் தான் நாம் பெரிதும் பயன் அடைய முடிந்தது. இவர் வேதியளிலும் நோபெல் பரிசு பெற்றுள்ளது மேலும் சிறப்பு.

கலங்கரை விளக்கத்திற்காக உழைத்த ஓர் அறிஞர் தன் கண்பார்வையே இழக்க நேரிட்டுள்ளடு. இவர்களின் தியாகங்களை நாம் போற்றவேண்டும்.

அறிஞர்களை போற்றவேண்டும்
அறிஞர்களை நாம் போற்றவேண்டும். நாமோ அவர்கள் புகழ் பெற்றபின்பு தான் அவர்களை போற்றுகிறோம். வேங்கட ராமகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகியோரை நாம் அவர்கள் புகழ் பெற்ற பின்னே போற்றுகிறோம்...

ஆன்மிகம் அற்ற அறிவயல் குருடானது அறிவியல் அற்ற ஆன்மிகம் நொண்டி என்று ஐன்ஸ்டீன் ஒரு தத்துவ மேதையும் கூட என்று எடுத்து காட்டினார்.

நம்பகத்தன்மை வேண்டி நோபெல் கமிட்டியின் தளத்தில் இருந்தே தகவல்களை பெரிதும் சேகரிக்கிறார். இவ்வாறான அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அவர்களுடைய சமுதாய உணர்வு, ஆற்றல், உழைப்பு ஆகியவை நமக்கு தெரிகிறது.

சில அறிஞர்கள் எமாற்றபடுவதும் உண்டு. உதாரணமாக ஜகதீஷ் சந்திர போஸே அவர்கள் மார்கோனிக்கு முன்பே ரேடியோவை கண்டுபிட்துவிட்டார் என்பதும் தொலைபேசியை தான் கண்டிபிடிததாக சிலர் வழக்கு தொடர்ந்டிருபதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதங்கம்
இன்றைய மாணவர்கள் பொழுதுபோக்கிலும் அதிகம் பணம் சம்பாதிபதிலுமே நோக்கம் உள்ளவர்களாக உள்ளார்கள். இனரிங்கர்களின் வரலாறுகளை படிக்கும் பொது தியாக மனப்பான்மை, உழைக்கும் திறன், சமுதாய உணர்வு ஆகியவை வளரும் என்பது இவரது நம்பிக்கை.

மைகேல் பாரடி இன் தி கெமிகல் ஹிச்டோரி ஒப் எ கண்டலே என்ற நூலை உலக தமிழ் ஆராய்ச்சி மையத்திற்காக இவர் மொழி பெயர்த்து உள்ளார் . தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் வகுப்புகள் எடுக்கிறார் ௬,௭. ௮ வகுப்பு மாணவர்களுக்கு. நகராட்சி பள்ளிகள் இது போன்ற வகுப்புகளால் பயனடைவதில்லை என்பது இவரது ஆதங்கம்.

மேற்றிகுலஷியன் பள்ளிகளும் சி பே எஸ் சி பள்ளிகுலுமே பெரிதும் பயன் அடைகின்றன. இதற்கு அரசின் நடவடிக்கை தேவைபடுகிறது.

உதரணமாக மத்திய அரசு ஒவ்வொரு பள்ளியுளும் இரு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூபாய் ஐயாயிரம் கொடுத்து அவர்களை சில ப்ரோஜெக்ட்ஸ் செய்ய ஊக்குவித்து அவற்றை மாவட்ட அளவில் போட்டியிட செய்து தேர்வு செய்து பிறகு மாநில மற்றும் தேசிய அளவில் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறாக தேர்வாகும் மாணவர்கள் படிப்பின் முழு செலவையும் அரசாங்கமே ஏற்கிறது.

இளமை
இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும் போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதையும் சக மாணவர் ராஜேந்திரன் குண்டடி பட்டு இறந்ததையும், அந்த போராட்டமும் மாணவர்களின் எழுச்சியும் தான் திராவிட கட்சிகள் வளர்ச்சி பெற உதவியதையும், தான் மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்ததையும், ராஜென்டிரனின் உருவ சிலையை கலைஞர் திறந்து வைக்க வந்தபோது அவருக்கு கருப்பு கொடி காட்டியதையும் , காமராஜற்காக நாகர்கோவிலில் இடைதேர்தளுக்காக அரசியல் பிரச்சாரம் செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தது சுவையாக இருந்தது.

ஆரம்பக்காலம்
ரங்கா சாய் பகுதியில் உள்ள குருசாமி பள்ளியில் இவர் ஆசிரியராக சேர்ந்த பொழுது இவரது சிறிய உருவமும் அங்கிருந்த ஒழுங்கீனத்தைக்கண்டு சற்றே அஞ்சியதும் பின் துணிச்சலுடன் செயல் பட்டு மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்ததும் அறிவியல் கழகம் நிறுவியதும் அறிவுச்சுடர் பத்திரிகை ஆரம்பித்ததும் மாணவர்களை கல்வி துணை செயல்களில் ஈடுபடுத்தி அவர்களை நல்வழி படுத்தியதும், தன் மகள் தன்னை 'அறிவுச்சுடரை கட்டி அழும் அப்பா'என்றழைத்ததும்,சுவையான நிகழ்ச்சிகள்.

வயதும் பணியும்
இவருக்கு இப்போது அறுபத்தியாறு வயது ஆகிபோனாலும் தான் ஒரு இளைஞனின் ஆர்வத்துடனும் ஷக்தயுடனும் செயல் படுவதை பெருமையுடன் பகிர்ந்துகொண்டார். இந்த அறிவியல் ஒளியை தமிழ்நாடு முழுவதும் பரவ செய்ய வேண்டும், தலைவர்களையும் நடிகர்களையும் போற்றுவது போலே அறிஞர்களையும் போற்ற வேண்டும் என்பதே தன் லட்சியம் எனவும் அதனை நோக்கியே தான் பயணிப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

தனது ஆசிரயர் ஒருவர் தான் படிக்கும் நூற்களின் குறிப்புகளை சேகரிக்கும் பழக்கத்தை கண்டு தானும் அது போல் சேகரிக்க தொடங்கியதும் அது தனக்கு பத்திரிகைகள் நடத்தும் போது உதவியதையும் நினைவுகூர்ந்தார்.

உலக அறிஞர்கள் பற்றி பல எழுதியிருந்தாலும் இந்திய அறிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல இதழ்களில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, சர் சி வி ராமனுக்கு உதவியாளராக இருந்த திரு கே எஸ் கிரிஷ்ணன் என்பவர் மின் அணு துறையில் முன்னோடியாக விளங்கியதையும் ஹோமி பாபா அவர்களை பற்றியும் விக்ரம் சாராபாய் , பிரபுல சந்திர என்ற மருந்தியல் துறை நிபுணர், சாஹா ஆகியோரை பற்றியும் எழுதி உள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் , பிரம்மோஸ் சிவதானுப்பில்லை அவர்களும் தனது பத்திரிகையில் பங்காற்றியுள்ளதையும் பல அறிஞர்கள் தனுக்கு உதவி வருவதையும் சுட்டி காட்டினார்.

கல்வித்திட்டத்தில் ஆலோசனைகள்
ஆசிரியர் பனி அறப்பணி அதற்க்கு உன்னை அர்ப்பணி. ஆசிரியர்கள் விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். பாடத்திட்டதுடம் கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்துச்சொல்ல வேண்டும். இதற்க்கு அவர்கள் நூலகங்களை நாட வேண்டும். நூலகங்களை செயல் படுத்த வேண்டும். நூலகத்திற்கு ஒரு வகுப்பு ஒதுக்க வேண்டும்.

பாடத்திட்டத்தை தாண்டி படிப்பதை ஊக்குவிக்க வேண்டும்; இதழ்கள் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும், செய்முறை பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 3 டி போன்ற படத்தை எளிமையை புரியச்செய்யும் அனிமேஷன் ஆகியவற்றின் மூலம் பாடம் கற்ப்பிக்க அரசு வகைசெய்ய வேண்டும்.

பத்திர்க்கைகள் படிப்பதை பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும். அதற்கும் மதிப்பெண் வழங்கினால் தான் மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி ஆர்வம் காட்டுவார்கள் என்பது இவரது கருத்து.

முன்பு நீதி போதனை என்று ஒரு வகுப்பு இருந்தது போல் மாணவர்களிடம் ஒழுக்கத்தை கற்பிக்கும் முறை வரவேண்டும். அறிவியல் மட்டும் அல்லாது பிற சமூகரிவியல் படங்களிலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் கருத்துக்களை பதிவிசெய்ய சொல்வது, அவர்களை சிந்திக்கத்தூண்டுவது. மாணவர்களின் கருத்துக்களை பற்றி ஆராய ஆசிரியர்கள் நன்கு படிதவர்களாய் இருத்தல் வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு பெரிய மாற்றம் ஏற்பாடு வாய்ப்பு உண்டு. நாம் காலம் காலமாக கட்டி அழும் பாடத்திட்ட முறையை விட்டொழித்து காலத்திற்கேற்றவாறு நம் பாட முறையை சுய சிந்தனையை தூண்டும் விதத்தில் புதியதாக கண்டுபிடிக்கும் விதத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

இறுதியாக ஒரு மாணவன் lpg சிலிண்டரின் எடையை அளப்பதற்கு காற்று நிறைந்த ஒரு டயர் டுபஐம் அதனுடன் ஒரு தண்ணீர் நிரம்பிய மெல்லிய டுபீயும் பொருத்தி அந்த தண்ணீர் அளவின் ஏற்ற இரக்கத்தை கொண்டு சிலிண்டரின் எடையை கூறும் எளிய முறைக்கு மத்திய அரசு பரிசு அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

1 கருத்து:

பகுத்தறிவு சொன்னது…

பகிர்வுக்கு நன்றி! ஆசிரியர் நா.சு. சிதம்பரம் அவர்களின் 'அறிவியல் ஒளி' இதழைக் கீற்று இணையத்தளம் இணையத்தில் இணைத்து உலகத் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறது. காண்க. http://www.keetru.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=64&Itemid=666

கருத்துரையிடுக