புதன், 14 செப்டம்பர், 2011

திரு ராஜமூர்த்தி 14.09.2011

திரு. ராஜமூர்த்தி
ஏற்றுமதி/ இறக்குமதி ஆலோசகர்
இயக்குனர், Global institute of foreign trade , மதுரை
படிப்பு: MTech MBA
தகப்பனார்: பேராசிரியர்
சிறப்பு : இந்நிகழ்ச்சியின் சிறப்பு எவரையும் ஏற்றுமதி/ இறக்குமதியில் ஈடுபட தூண்டுவதும் நம்மாலும் முடியும் என நினைக்க தூண்டுவதும்.

Export promotion council ஆற்றும் சேவைகள்:
மாங்காயில் இருந்து பல்ப் எடுத்து அதை ஏற்றுமதி செய்ததன் மூலம் தருமபுரியில் பல தொழில் நிறுவனங்கள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.. இதில் export promotion council கள் இந்த மாதிரியான தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றன. market development , technical development இம்மாதிரி ஆன உதவிகளை நாம் இவர்களிடம் பெறலாம்.

QUOTA
WTO வந்ததுக்கு அப்புறம் quota eliminate பண்ணிட்டாங்க. உலகம் என்பது ஒரே சந்தை. எது தான் ஸ்லோகன். தரமான பொருட்களை வைத்திருப்போர்
இந்தியாவில் இணைக்கும் சில பொருட்களுக்கு உதாரணத்துக்கு காட்டன் கு demand high இருந்துச்சு அதனால வெளிநாட்டுக்கு அதிகம் ஏற்றுமதி ஆச்சு உள்நாட்டுல விலை ஜாஸ்தி ஆச்சு. அதனால உள்நாடுல இருக்குற textile உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி எ தடை செய்ய கோரினார்கள். அப்ப அரசாங்கம் restricted கோட்டா based அதாவது குறிப்பிட்ட quantity தான் அனுப்ப முடியும் னு கொண்டு வந்தாங்க. உள்நாட்ல விலை ஏற்றத்த கட்டுபடுத்த இந்த கோட்டா சிஸ்டம் உதவுச்சு. அத்யாவசிய பொருட்களுக்கு இது நடைமுறைக்கு வந்தது.
வேளாண் துறையில்... value addition:
நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் வேளாண் துறையில் வருமானம் மிக குறைவு. இத்துறையில் வருமானத்தை அதிகரிக்கும் வைப்புகாலை ஏற்படுத்தி தறிவது நம் கடமை. உலக அளவில் நம் வேளாண் பொருட்களுக்கு தேவை உள்ளது.
உதாரணமாக, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்த மஞ்சள் ஒரு வர்ண பொருள், கிருமி நாசினி, அழகு பொருள் சாதனங்கள், உணவு பொருள் தயாரிப்பு ஆகியவற்றிற்கு அத்தியாவசியமானது.
இந்த பயன்களை முழுமையாக பெற்றிட மஞ்சள்ளுக்கு value addition என்று ஒன்று தேவை படுகிறது. அதாவது மஞ்சளை பவுடர் ஆகவோ திரவமாகவோ செய்து, சில பொருட்களில் ஆயில் extract செய்யலாம் இது போன்ற value addition செய்தால் அதன் பலன்கள் பல. நம் விவசாயிகளுக்கு நாம் இதை உணரச்செய்தால் அவர்கள் பலன் அடைவார்கள் நம் வேளாண் பொருட்களும் உலகச் சந்தையை சென்றடையும் அவற்றின் மதிப்பும் கூடும் நம்மவர்களின் வருமானமும் கூடும்.

தக்காளியை எடுத்துக்கொண்டால் அதற்கும் சர்வதேஸ் சந்தையில் தேவை அதிகம். அனால் நாம் இங்கு விளைவிக்கும் தக்காளிகளை அப்படியே ஏற்றுமதி செய்ய முடியாது அவற்றிற்கு value addition செய்து அதை ஒரு paste ஆக்கி ஏற்றுமதி செய்ய முடியும். உலகின் எந்த மூளையையும் சென்றடையும். இவ்வாரக நம் வேலன் போருட்கல்லின் மதிப்பை கூடி வருமானத்தையும் ஈட்டலாம்.
பழங்களை எடுத்துக்கொண்டமனால் உலக அளவில் அதிகம் தேவைப்படும் பழம் வாழைப்பழம். அதன் உற்பத்தியுளும் இந்தியாவே முதளிடத்துள் உள்ளது. அனால் ஏற்றுமதி என்று வரும் பொது நாம் பின்னுக்கு தள்ளபடுகிறோம். இது சீக்ரம் கெட்டுப்போகும் தன்மை உடையதனதால் நம் பழங்கள் சந்தையை சென்றடைய முடியவில்லை.
இதேபோல் நம் மாம்பழங்களுக்கும் வெளி நாடுகளில் நல்ல demand உண்டு.
இந்த நிலையின் மறுபக்கம், நம் விளைச்சலுக்கு சந்தை தேடுவது போக, சந்தைக்கு ஏற்ப நாம் விளைச்சல் செய்வது.
உதாரணதிற்கு ஐரோப்பிய நாடுகளில் காலை உணவுடன் வெள்ளரிக்கையில் ஆனா ஒரு ஊறுகாயை உண்பது வழக்கமாக உள்ளது. நம் கிராமங்களில் இந்த வெள்ளரிக்காய் மிக எளிமையாக கெடைக்க கூடிய பொருள். மகாராஷ்டிரத்தில் சில கம்பனிகள் இந்த வைப்பை பயன்படுத்தி அந்த வெள்ளரி pickle ஐ இங்கேயே தயார் செய்து ஏற்றுமதி செய்கின்றன.
அதே போல் நாம் சீண்டாத வேப்ப எண்ணெய் க்கு வெளி நாடுகளில் அதிக demand இருக்கு. இதை நாம் பயன் படுத்திக்கொள்ளலாம். இது போல் அயல் சந்தையில் உள்ள தேவைக்கு ஏற்ப நம் பரம்பரய் பொருட்களின் விளைச்சலை அதிகம் செயதொமனாலே நாம் அதிகம் ஈட்டலாம்.
Quality controls பற்றி...
WTO ஐ பொறுத்த வரை தர கட்டுபாடுகளுக்கு உலக அளவில் ஒருமித்த கருத்து எட்டபடாததால் உலக அளவில் ஒரே தர நெறி முறை என்பது இல்லை. உலக வர்த்தகத்தை பொறுத்த வரை பல் வேறு விஷயங்களுக்கும் ஒரு சரியான நெறி முறைகள வகுக்கப்பட்டு விட்டாலும் , இன்னும் தர கட்டுபாடுகள் ஒரு எட்டாத இலக்காகவே உள்ளன. ஒவ்வொரு நட்டில்லும் வேறு தர நெறிமுறைகளே இதற்க்கு காரணம்.
இதனால் தான் இண்டைவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருள் முதலில் இந்திய அரசாங்கத்தின் quality inspection க்கும் பின்பு இறக்குமதி செய்யும் நாட்டின் தர கட்டுபடுகளுக்கும் உள்ளாக வேண்டும் என்ற நிலை உள்ளது.
குறிப்பாக உணவு பொருட்கள், ரசாயன பொருட்கள், கடல் உணவு பொருட்கள், குறிப்பாக எறால் முதலியவை இதற்க்கு அதிகமாகவே உட்படுத்த படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் இங்கிருந்து ஏற்றுமதி ஆகும் எறால் பொருட்களுக்கு catchment certificate என்ற ஒன்று அவசியம் என்றொரு புதிய கட்டுபாட்டை கொண்டு வந்தனர். அதாவது மீன்கள் இந்த கடல் பகுதியில் பிடிக்கப்பட்டன என்றொரு சான்றிதழை கேட்டனர்.
இந்த சான்றிதழை பெறுவதற்காக ஏற்படும் கால தாமதம் நம் கடல் பிடியின் durability ஐ பாதித்தன. சந்தையிலும் நம் பொருட்களுக்கான demand உம குறைந்துபோனது. இதற்காக இந்திய அரசு தலையிட்டு ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

நோய்கள் சார்ந்த கட்டுபாடுகள்..
bird flu வாத காலத்தில் நம் முட்டை ஏற்றுமதி, மற்றும் இறைச்சி ஏற்றுமதி பெரிதும் அடிபட்டு போனது. உதாரணமாக மேற்கு ஆசியா வில் நம் முட்டைகளுக்கு அன்று விதித்த தடை இன்றும் கூட விளக்கப்படவில்லை.

மாம்பழம் பொறுத்த வரையில் கூட நாம் உபயோகப்படுத்தும் ரசாயன பொருட்கள் வளர்ப்பு முறைகள் ஆகியவற்றிர்க் அமெரிக்க முதலிய நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. நம் மாம்பழங்களில் கொட்டை பகுதியில் வண்டு இருபது இயல்பானது அனால் இது அவர்களது தர கட்டுபாட்டில் ஏற்கமுடியாதது. இது போன்ற எதிர்ப்புகளால் நம் மாம்பழங்கள் இப்போது ஒரு விதமான screening கு உட்படுதப்டுகின்றன. இது நம் ஏற்றுமதியை பெரிதும் பாதித்தது.

நம் மாம்பழங்களுக்கு demand இருந்தும் கூட இந்த testing போன்றவற்றால் ஏற்படும் காலதாமதத்தால் நம் பொருட்கள் தரம் எழந்து போகும் நிலை உண்டாகிறது. இது போன்ற, சுழலில் நம் வளர்ப்பு முறைகளை நாம் சர்வதேச தேவைகளுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற கட்டுபாடுகள் நாட்டுக்கு நாடு வேறு படுகின்றன. ஆசிய பகுதி நாடுகளில் ஏறத்தாழ ஒரே மாதிரியான தர கட்டுபாடுகளும், ஐரோப்பிய , மற்று வாடா அமெரிக்க நாடுகளின் தரம் மிக உயர்ந்ததாகவும், ஆப்ரிக்க நாடுகளில் குறைந்ததாக உள்ளது. ஒரே மாதிரியான தர கொள்கையை நோக்கி செல்வதற்கு WTO முயன்று வருகிறது.

ஏற்றுமதி செய்ய என்ன தகுதிகள்...
அடிப்படை தகுதி கல்வி ரீதியாக வோ பொருளாதார ரீதியாகவோ ஏதும் இல்லை. ஒருவரின் தன்னம்பிக்கையும் உலக பார்வையும் தான் தேவை படிகிறது. புதிய முயற்சிகள், ஆர்வம், இவை தான் தேவை. ஒரு தனி நபர் வீட்டில் இருந்த படி சில ஆயிரம் ரூபாய் முதலீடிலேயே ஏற்றுமதி செய்யலாம்.
எ கா வாக ஹாங்காங் இல் சின்ன நாட்டில் முப்பது லட்ச ஏற்றுமதிஆளர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலோனோர் merchandise அல்லது ஒரு agency என்ற அளவிலேயே செயல் படுகின்றன. இவர்கள் supply உள்ள இடத்தில் இருண்டு வாங்கி demand உள்ள எடத்துக்கு ஏற்று மதி செய்கின்றனர் அவ்வளவே. இதன் மூலமே அவர்கள் உலக உளவில் ஒரு சிறந்த நிலையை எட்டி உள்ளனர்.

நம் நாட்டில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்ற தவறான எண்ணம் பரவியுள்ளது. இதை உடைத்தெறிய வேண்டும்.
உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்களால் பயிற்ருவிக்கபட்ட ஒருவர், மீனவர்களை சேர்ந்தவர், அயல் நாடுகளுக்கு சங்கு முதலிய sea shells கரையில் கிடைக்கும் கிழிஞ்சல் பொருட்களை , நாம் குப்பைகளாக நினைக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து வெற்றி கண்டுள்ளார். நம் பொருளாதார வசதிக்கேற்ப நாம் ஏற்றுமதியில் திட்டமிட்டு ஈடுபடலாம்.
யார் வேண்டுமானாலும் ஏற்றுமதியாளர் ஆகா முடியும் என்பதே உண்மை.
merchandise exports பற்றி..
ஏற்றுமதியில் இரு வகை, ஒன்று manufacturing exports மற்றொன்று merchandise exports . முதல் வகையில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் தம் உற்பதயை ஏற்றுமதி செய்கின்றன. இரண்டாம் வகையில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். இதில் உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருளை வாங்கி தேவை உள்ள நாடுகளுக்க் நாம் ஏற்றுமதி செய்கிறோம். ஹாங்காங் போன்ற குட்டி நாடுகள் உற்பத்தி திறன் அதிகம் இல்லாததால் re -export என்று சொல்லப்படும் ஒரு நாட்டம் இருந்து இறக்குமதி செய்து இநோன்ருக்கு ஏற்றுமதி செய்வதிலேயே ஈடுபடுகின்றன.
நாம் re export செய்ய வேண்டிய தேவை இல்லை. இந்தியாவில் பல இடங்களில் பரவி உள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி அவற்றை ஏற்றுமதி செய்யலாம். இது தான் merchandise exports
இதில் நாம பெரிய முதலீடு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது demand உள்ள பொருள்ளை தேர்வு செய்து அதை ஏற்றுமதி செய்தாலே போதும்.

ஏற்றுமதி ஆளராக வழி முறைகள் :
முதலில் ஏற்றுமதி இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் அங்கீகாரம் பெறவேண்டும். இதை IEC என்பர் அதாவது IMPORT EXPORT CODE என்பர். இதை பெற நீங்கள் முதலில் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் இது ஒரு proprietership ஆகவோ partnership ஆகவோ இருக்கலாம். பின் DGFT என்று சொல்லபடுகிற directorate general of foreign trade அலுவலக்தில் இவை மண்டல அளவில் உள்ளன , தமிழ் நாட்டில் சென்னை மதுரை கோவையில் உள்ளன. இங்கு ஏற்றுமதி இறக்குமதிக்கான license ஐ பெற்றுக்கொள்ளலாம். இரண்டுக்கும் சேர்த்து ஒரே license தான். அதுமட்டும் இல்லாமல் எந்த பொருள் ஏற்றுமதி செய்யவும் ஒரே license தான். எந்த பொருள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு தான் license கு apply செய்ய வேண்டும் என்பது இல்லை. ஏற்றுமதி செய்யும் எண்ணம் இருந்தாலே போதும்.
இந்த license வைத்து அரசு அங்கீகரித்துள்ள எந்த போருல்லையும் ஏற்றுமதி/ இறக்குமதி செய்யலாம். கூடுதலாக exports promotion council இல் member ஆக வேண்டி இருக்கலாம். இது சில நேரங்களில் கட்டாயமாக இருக்கும் சில நேரனக்ளில் optionalaaga இருக்கும் அது நாம் ஏற்றுமதி செய்யும் பொருளை பொருத்தது. அவ்வளவே.
அதற்கு பின் நடை முறை விஷயங்களில் நாம் நம்மை தேர்ச்சி செய்து கொள்ள வேண்டும் இது பிறர் அனுபவம் மற்றும் முறையான பயிற்சியின் முலம் பெற்றுக்கொள்ளலாம்.குறிப்பாக customs clearance , RBI இன் அந்நிய செலவாணி guidelines முதலிய நடைமுறை விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

பணத்துக்கு பாதுகாப்பு
தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக தற்போது பண பரிவர்த்தனைகள் மிகும் பதுகாபநவைஆக உள்ளன. உதாரணமாக LC என சொல்லபடுகிற Letter of Credit துணை வருகிறது. இதில் இறக்குமதியாலரின் சார்பில் அவரது வங்கி நமக்கு சேர வேண்டியா பணத்துக்கு உத்தரவாதம் கொடுக்கிறது.

இது போன்ற முறைகளால் பண பரிவர்த்தனைகள் இன்று ரொம்பவே பாதுகாப்பானவையாக உள்ளன.

இறக்குமதி பற்றி
நாம் petroleum பொருட்களை அதிகம் இறக்குமதி செய்கிறோம் அது மட்டும் இன்றி பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளோம். உதாரணமாக சமையல் எண்ணேய் thevaiyil நாம் இன்று 50 % மேல் இறக்குமதியே செய்கிறோம். இது நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். பருப்பு முதலிய பொருட்களிலும் இந்த நிலா ஏற்பட வைப்பு உள்ளது. நம் அடிப்படை தேவைகளுக்கு நாம் இறக்குமதி செய்யும் நிலை நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

உலக சந்தையில் சீனா
WTO வெளியிடும் உலக நாடுகளின் வர்த்தக தர வரிசையில் இந்திய 20 வது இடத்தில உள்ளது ஆனால் சீன வோ 1 வது இடத்தில உள்ளது. 1980 இல் நமக்கு பின் இருந்த சீன இன்று முதல் இடத்தில் உள்ளது என்பது நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். 1980 களில் உலக நாடுகள இந்திய உம சீனாவும் மக்கள் தொகை மிகுந்தவை ஆகையால் இவை வளர வைப்பு இல்ல என்று கருதியபோது அந்த மக்கள் தொகையே எங்கள் செல்வம் என்று உலகை திரும்பி பார்க்க செய்தது சீனா.

2009
இல் இருந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது சீனா. தன்னிடம் இருந்த பொருட்கள் உற்பத்தி திறனை சில வியுகங்கள் அமைத்து பெரிதும் பெருக்கியது சீனா. குறிப்பாக cluster approach என்று சொல்லகூடிய mile long என்ற வியுகத்தை கையாண்டது. இதன் படி ஒரு குறிப்பிட்ட மைல் நீளம் உள்ள ஒரு பகுதியில் ஒரே மாதிரியான தொழில் சாலைகள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு தேவையான ஊக்கம் கொடுக்கப்பட்டது. விளைவு இன்று உலக சந்தை சீனா பொருட்களால் நிரம்பி வழிகிறது.
பயிற்சி பற்றி...
ஏற்றுமதி செய்யும் பொருளை கண்டறிவது அதற்குண்டான marketai கண்டறிவது, order எடுப்பது அதை நடைமுறை படுத்துவது, documentation , பண பரிவர்த்தனைகள் பற்றி, post export procedures , இது போன்றவற்றில் பயிற்சி அளித்து வந்தோம். இந்நிலையில் இந்தியாவில் ஏற்றுமதியாளர்கள் பெருகிவந்த நிலையில் இவர்குளடன் பணியாற்ற professionals தேவை என்பதை உணர்ந்தோம். இதற்காக தமிழகத்தில் முதல் முறையாக அயல்நாட்டு வர்தகதிற்கென ஒரு business school ஒன்றை மதுரையில்நிறுவி உள்ளோம். இதில் MBA in export /import managemant , MBA in logistics management , MBA in shipping and port management ...
logistics என்பது எல்லா நிருவனகளிலும் பொருட்கள் inbound and outbound movement இருக்கும் raw material procure செய்வது முதல் இறுதி பொருளை சந்தையில் சேர்ப்பது வரை இதில் அடங்கும். supply chain என்பது இதன் அடுத்த பரிமாணம் இதில் சந்தைகள் இணைப்பு பற்றியது.
ஏற்றுமதி இறக்குமதி பெருகி வரும் இக்காலத்தில் இத்துறையில் வல்லுனர்களுக்கு அதிகம் தேவை உள்ளது.
இதே போல் இன்னொரு அத்தியாவசிய துறை shipping and port management . நாம் பெரும்பாலும் இந்திய துறைமுகங்கள் என்றால் சென்னை, மும்பை போன்ற பெரி துறைமுகங்களை எண்ணுகிறோம். ஆனால் இந்திய வில் பல சிறு துறைமுகங்கள் வளர்ந்து வருகின்றன. இவை பெரும்பாலும் தனியார் உதவியுடன் மேம்படுதபடுகின்றன.
எடுத்துகாட்டாக காரைக்கால் துறைமுகத்தை maarg எனும் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இம்மதிர்யான project இல் BOT எனப்படும் build operate transfer எனும் முறையில் செயல்படுகின்றன. இவை non major ports எனபடுகின்றன. இது நெடுஞ்சாலைகளில் toll way அமைப்பது போன்றது. இவ்வாறாக 250 non major ports development காக கண்டறியப்பட்டுள்ளன. எனவே இதுவும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு துறை.

இந்த துறைகளில் தேவை படும் வல்லுனர்களை தயார் செய்யவே நாங்கள் foreign trade இர்ககவே ஒரு business school ஐ தொடங்கி உள்ளோம். இது போன்ற மற்றும் ஏற்றுமதி இறக்குமதி துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள எங்க global foundation என்ற எங்கள் நிறுவனம் மூலம் தொலைநோக்குடன் செயல் பட்டு வருகிறோம்.

புதிய தலைமுறைகள் தாங்கள் பாப்ரம்பரியமாக் செய்து வந்த தொழில் தங்கள் படிப்பு மட்டும் exposure முலம் தங்களுக்கு கிடைத்த அறிவை பாரம்பரிய தொழில் செலுத்தி அதன் மேன்பாடிற்கு வழி செய்து வளர்ச்சி காண்கின்றன. உதாரணமாக் நண்பர்கள பலர் பரமபரியமாக தங்க நகை சிஐம் தொழில் கொண்டவர்கள் தங்கள் புது அனுபவங்களை செளுதஈ பல புதுமைகளை செய்துள்ளனர்.

இது போன்ற புதிய தொழில் முனைவர்களை ஊக்கிவிக்க வேண்டியது நம் கடமை.

இணையத்தின் பங்கு
முன்பு ஒரு order காக quotation அனுப்பிவிட்டு பின் பதிலுக்காக காத்திருந்து பின் செயல்பட வேண்டிய நிர்பந்தம் இருந்தது ஆனால் இன்றோ தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல் பரிமாற்றம் நிமிடங்களில் நடந்து முடிகிறது. ஆனால் இதில் நாம் கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கைகளும் உள்ளன. உதரனத்திற்க்கு நமக்கு வரும் ஒரு order இன் நம்பகத்தன்மையை அறிய நாம் export credit guarantee corporation எனும் ECGC அலுவலகத்தை அணுகலாம். இவர்கள் அந்த ஆர்டர் கொடுத்த நபர் நிறுவனம் பற்றிய செய்திகளை நமக்கு தருவார்கள்.

இலட்சியம்

மாதம் தோறும் மாவட்டம் தோறும் இரு நகரங்கள் வீதம் கருத்தரங்குகள் நடத்தி ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தமான விழிப்புணர்வை பெருக்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு செயல் பட்டு வருகிறார்.2015 ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் ஏற்றுமதி ஆளர்களை உருவாக வேண்டும் என்ற லட்சயிதுடன் செயல் பட்டு வருகிறார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக